அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

நான்கு நாள் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா ஆதரவு

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட், நான்கு நாள் டெஸ்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறது என்று...

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:24 pm

எழில்

பல டெஸ்ட் ஆட்டங்கள் நான்கு நாள்களுக்குள் முடிந்துவிடுவதால் ஐந்து நாள்களுக்கு நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டை நான்கு நாள்களாகச் சுருக்க ஐசிசி யோசனை செய்து வருகிறது. 2023 முதல் தொடங்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து நான்கு நாள் டெஸ்டைக் கட்டாய நடைமுறைக்குக் கொண்டுவர ஐசிசி திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம், நான்கு நாள் டெஸ்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக பிரிட்டனின் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டது. இதற்கு, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.

தவறான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட், நான்கு நாள் டெஸ்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறது என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியதாவது: நாங்கள் தான் முதல் சர்வதேச நான்கு நாள் டெஸ்டை ஜிம்பாப்வேவுக்கு எதிராக சில வருடங்களுக்கு முன்பு நடத்தினோம் என்று கூறியுள்ளது.

2018 முதல் 60 சதவிகித டெஸ்ட் ஆட்டங்கள் நான்கு நாள்களுக்குள் முடிந்துவிடுவதால் இந்தப் புதிய நடைமுறையைக் கட்டாயமாக்க ஐசிசி தீவிரமாக யோசித்து வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரு நான்கு நாள் டெஸ்ட் ஆட்டங்கள் இதுவரை நடைபெற்றுள்ளன. தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே, இங்கிலாந்து - அயர்லாந்து. அடுத்த வருடம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா நான்கு நாள் டெஸ்டில் விளையாடவுள்ளது. இதனால் நான்கு நாள் டெஸ்ட் கட்டாயமாக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது.

இதுகுறித்த செய்தி வெளியானது முதல் ஐசிசியின் புதிய திட்டத்துக்கு பல்வேறு வகையான விமரிசனங்கள் வெளிவந்துள்ளன. கிரிக்கெட் நிர்வாகிகள் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் வீரர்கள் மட்டும் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் துபையில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி கிரிக்கெட் குழுவில் நான்கு நாள் டெஸ்ட் குறித்து ஆலோசனை நடைபெறும் என அக்குழுவின் தலைவர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நானும் அந்தக் குழுவில் ஒருவன் என்பதால் நான்கு நாள் டெஸ்ட் குறித்த என்னுடைய கருத்தை இப்போது கூற முடியாது. அந்தக் கூட்டத்தில் நான்கு நாள் டெஸ்ட் குறித்து விவாதித்து பிறகு உங்களிடம் தெரிவிப்போம் என்றார். ஐசிசி கிரிக்கெட் குழுவில் ஆண்ட்ரூ ஸ்ராஸ், ராகுல் டிராவிட், மஹேலா ஜெயவர்தனே, ஷான் பொல்லாக் ஆகிய வீரர்கள் உள்ளார்கள். 

நான்கு நாள் டெஸ்ட் குறித்த யோசனைக்கு விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் போன்ற கிரிக்கெட் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, நான்கு நாள் டெஸ்ட் குறித்துக் கூறியதாவது: என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டின் தன்மையை மாற்றக்கூடாது. டெஸ்ட் கிரிக்கெட்டை வணிகமாக்கும் பொருட்டு, பகலிரவு டெஸ்டுகள் நடக்கின்றன. அது ரசிகர்களிடையே ஆர்வத்தை உண்டுபண்ணுகிறது. அதேசமயம் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் மாற்றிவிடக்கூடாது. அதில் எனக்கு நம்பிக்கையில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மாற்றம் கொண்டு வரலாம் என்றால் பகலிரவு டெஸ்டுகளை நடத்துவதுதான் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.