சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

புத்தாண்டு தினத்தன்று தனது காதலியை அறிவித்த ஹார்திக் பாண்டியா! (படங்கள்)

இளம் கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா, நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சுடனான காதலை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் விதமாக... 

News image
Updated On :1 ஜனவரி 2020, 10:08 am

இளம் கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா, நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சுடனான காதலை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹிந்தி பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நடாஷா, மும்பையில் வசிக்கும் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். நடிப்பு வாய்ப்புக்காக 2012 முதல் இந்தியாவில் வசிக்கும் நடாஷா, சத்யாகிரஹா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 

கிரிக்கெட் வீரர் பாண்டியாவும் நடிகை நடாஷாவும் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தனது காதலை அறிவிப்பது போல நடாஷாவுடனான புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளார் பாண்டியா. புத்தாண்டை இவருடன் தொடங்குகிறேன் என்று எழுதியுள்ளார். இந்தப் புகைப்படத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் ராகுல், சஹால் ஆகியோரும் எதிர்வினையாற்றியுள்ளார்கள்.

Story image

முதுகு வலி காரணமாக சமீபகாலமாக அவதிப்பட்டு வந்த ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்குக் கடந்த செப்டம்பர் மாதம் லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. 25 வயது பாண்டியா 11 டெஸ்டுகள், 54 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2018-ல் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியின் போது ஹார்திக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பல ஆட்டங்களில் விளையாடவில்லை. சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பாண்டியா, முதுகு வலி காரணமாக தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கவில்லை. மே.இ. தீவுகள் அணிகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரிலும் இடம்பெறாத பாண்டியா, நியூஸிலாந்துக்குச் செல்லும் இந்திய ஏ ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.