இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான மகளிர் டி20 முத்தரப்புத் தொடரின் இறுதிச்சுற்று ஆட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை மூனே, 54 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் டிபி சர்மாவும் கயாக்வாடும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
சற்று கடினமான இலக்கை இந்திய அணி எதிர்கொள்ள தொடக்க வீராங்கனை மந்தனா உதவினார். 37 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து நம்பிக்கை ஏற்படுத்தினார். ஆனால், 15-வது ஓவரில் அவர் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணி தடுமாறியது. விரைவாக ரன்கள் எடுக்கவேண்டும் என்கிற நிலையில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 144 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜெஸ் ஜொனாஸ்ஸென் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதிச்சுற்று ஆட்டத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி, முத்தரப்புத் தொடரை வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பி.ஏ.சி.ராமசாமிராஜா சிலைக்கு மரியாதை

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில்களில் வருஷாபிஷேகம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலையா? போலீஸாா் விசாரணை

சிவகங்கை மாவட்டத்தில் ஆண்களைவிட கூடுதலாக 10 சதவீத பெண்கள் வாக்குப் பதிவு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


