தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பேன்: ராபின் உத்தப்பா நம்பிக்கை

46 ஒருநாள், 13 டி20 ஆட்டங்களில் விளையாடிய உத்தப்பா, கடைசியாக இந்திய அணிக்காக 2015-ல் விளையாடினார்.

News image
Updated On :7 ஏப்ரல் 2020, 10:15 am

ராபின் உத்தப்பா. குறுகிய காலம் இந்திய அணிக்காக விளையாடியவர்.

46 ஒருநாள், 13 டி20 ஆட்டங்களில் விளையாடிய உத்தப்பா, கடைசியாக இந்திய அணிக்காக 2015-ல் விளையாடினார்.

ஆனாலும் இந்திய அணியில் இடம்பெற்று உலகக் கோப்பையில் விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் 34 வயது உத்தப்பா, க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

தற்போது போட்டி மனப்பான்மையுடன் இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். இன்னமும் சாதிக்கவேண்டும் என்கிற தீ என்னுள்ளே எரிந்து கொண்டிருக்கிறது.

உலகக் கோப்பைப் போட்டியில் நான் விளையாடுவேன் என நம்பிக்கை உள்ளது. முக்கியமாக ஒருநாள், டி20 கிரிக்கெட் ஆட்டங்களில். இதில் கடவுளின் ஆசி அல்லது அதிர்ஷ்டம் மிகவும் முக்கியமானது. இந்தியாவில் உள்ள ஏராளமான திறமைகளுக்கு மத்தியில் இதை நம்பியாகவேண்டும்.

உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது எனச் சொல்லவே முடியாது. அப்படி நினைத்தால் நீங்களே உங்களுக்கு நியாயமாக இல்லை என்றாகிவிடும். உங்களுக்குத் திறமை உள்ளதாக நீங்கள் நம்பும்போது, இந்திய அணியில் இடம்பெற ஓரளவு வாய்ப்பும் இருக்கும்போது நம்பிக்கையுடன் இருக்கவேண்டும். இருக்கும் சிறிதளவு வாய்ப்பைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.

நிலைமை எனக்குச் சாதகமாக இருந்தால், உலகக் கோப்பையை வெல்லும் இந்திய அணியில் நானும் இடம்பிடித்திருப்பேன். அந்த வெற்றியில் நானும் பங்களித்திருப்பேன். இந்தக் கனவு இன்னமும் என்னிடம் உள்ளது. இந்தக் கனவு உள்ளவரை நான் விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.