அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஷகிப் அல் ஹசனுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப்பட்டிருக்க வேண்டும்: முன்னாள் வீரர் கருத்து

ஷகிப் அல் ஹசன் மீது எந்த அனுதாபமும் இல்லை. இந்தக் காலக்கட்டத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று...

News image
Updated On :30 அக்டோபர் 2019, 9:29 am

மேட்ச் ஃபிக்ஸிக் முறைகேடு புரிய அணுகியவா்கள் தொடா்பாக தகவல் தெரிவிக்காத காரணத்துக்காக வங்கதேச டி20, டெஸ்ட் அணி கேப்டனும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது. அவருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு முழு தடையும், 12 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட தடையும் அளிக்கப்பட்டுள்ளது. ஷகிப் அல் ஹசனுக்குத் தடை விதிக்கப்பட்டதால் மஹ்முதுல்லா டி20 அணியின் கேப்டனாகவும் மொமினுல் ஹக் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

இந்நிலையில் 2 வருடத் தண்டனை போதாது என்று ஐசிசியின் முடிவை விமரிசித்துள்ளார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் எழுதிய பதிவு:

ஷகிப் அல் ஹசன் மீது எந்த அனுதாபமும் இல்லை. இந்தக் காலக்கட்டத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று வீரர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஏதாவது நடந்தால் வீரர்கள் நேராகப் புகார் அளிக்கவேண்டும். 2 வருடத் தண்டனை போதாது. இன்னும் அதிகமாக இருந்திருக்கவேண்டும். என்னை மோசமாகப் பேசுபவர்களுக்கு - ஊழலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நீங்கள் எந்த அணிக்காக விளையாடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. இந்தக் கால வீரர்களுக்கு என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பது நன்குத் தெரியும். எது நடந்தாலும் புகாரளிக்க வேண்டும் என்பதும் தெரியும். அப்படிச் செய்யாவிட்டால் பின்விளைவுகள் என்ன என்பதும் அவர்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். ஷகிப் அல் ஹசனின் நடவடிக்கையை முன்னாள் வீரர்கள் ரமீஸ் ராஜா, டீன் ஜோன்ஸ் போன்றோரும் விமரிசித்துப் பதிவுகள் எழுதியுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.