வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 3 அன்று தொடங்கி நவம்பர் 10 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 14 அன்று தொடங்கி நவம்பர் 26 அன்று நிறைவுபெறுகிறது.
இந்நிலையில் இளம் வீரர் ஷுப்மன் கில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு டி20 அணியில் இடம் இல்லை. இதுகுறித்து தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
ஷுப்மன் கில், மிகத் திறமையான வீரர். ஆனால் டி20 அணியில் 15 பேரை மட்டும் தானே தேர்வு செய்யமுடியும்? மேலும் இது 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் மட்டுமே. வருங்காலங்களில் அனைத்து வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும் அவர் நம் அணியின் முக்கிய வீரராகத் திகழ்வார் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


