ராஞ்சியில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 4 வரை நடைபெறவுள்ள தியோதர் கோப்பை 50 ஓவர் போட்டிக்கான மூன்று அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய ஏ அணிக்கு விஹாரியும் இந்தியா பி அணிக்கு பார்தீவ் படேலும் இந்தியா சி அணிக்கு ஷுப்மன் கில்லும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியா ஏ அணியில் ஆர். அஸ்வின் இடம்பெற்றுள்ளார். 2017 ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணியில் அஸ்வினுக்கு இடம் கிடைப்பதில்லை. இந்நிலையில் இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசினால் அது அஸ்வினுக்குத் திருப்புமுனையாக அமையலாம்.
மேலும் தமிழக வீரர்களான விஜய் சங்கர், பாபா அபரஜித் ஆகியோர் இந்தியா பி அணியில் இடம்பெற்றுள்ளார்கள். இந்தியா சி அணியின் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் தேர்வாகியுள்ளார். எனினும் விஜய் ஹசாரே போட்டியில் சிறப்பாக விளையாடிய அபினவ் முகுந்துக்கு எந்த அணியிலும் இடம் கிடைக்கவில்லை.
சமீபத்தில் விஜய் ஹசாரே போட்டியில் இரட்டைச் சதமெடுத்த இளம் மும்பை வீரர் யாஷவி ஜைஸ்வாலுக்கு இந்தியா பி அணியில் இடம் கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


