வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 3 அன்று தொடங்கி நவம்பர் 10 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 14 அன்று தொடங்கி நவம்பர் 26 அன்று நிறைவுபெறுகிறது.
டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 அணியில் சஞ்சு சாம்சன், ஷிவம் டுபே ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள். டி20 தொடரில் விராட் கோலி பங்கு பெறாததால் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரிலும் தோனி இடம்பெறவில்லை.
டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவன், கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கிருனாள் பாண்டியா, சஹால், ராகுல் சஹார், தீபக் சஹார், கலீல் அகமது, ஷிவம் டுபே, ஷர்துல் தாக்குர்.
டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, விஹாரி, சஹா (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில், ரிஷப் பந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


