மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

அனுபவமில்லா இலங்கை அணியிடம் முழுமையாகத் தோற்ற நெ.1 பாகிஸ்தான் அணி!

கடைசி டி20 ஆட்டத்தில் 5 வீரர்களை மாற்றியது. இருப்பினும் அதனுடைய வெற்றியை பாகிஸ்தான் அணியால் தடுக்கமுடியவில்லை. 

News image
Updated On :10 அக்டோபர் 2019, 7:26 am

பாகிஸ்தானுக்குச் சென்ற அனுபவமில்லா இலங்கை அணி, நெ.1 டி20 அணியான பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே 3-0 என வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஏற்கெனவே தொடரை வென்ற இலங்கை அணி, கடைசி டி20 ஆட்டத்தில் 5 வீரர்களை மாற்றியது. இருப்பினும் அதனுடைய வெற்றியை பாகிஸ்தான் அணியால் தடுக்கமுடியவில்லை. 

லாகூரில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அறிமுக வீரர் ஒஷாடா ஃபெர்னாண்டோ, 48 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர்  3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இலக்கை விரட்டும்போது, பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடியதுதான் பெரிய சிக்கலாக அமைந்தது. முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் சேர்ந்து 72 பந்துகளில் 76 ரன்கள் மட்டும் எடுத்தார்கள். இதனால் பின்னால் வந்த வீரர்களுக்குக் கடும் அழுத்தம் ஏற்பட்டது. முதல் 15 ஓவர்கள் வரை பாகிஸ்தான் அணியால் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் தான் எடுக்க முடிந்தது. இதனால் கடைசி 30 ரன்களில் 54 ரன்கள் தேவைப்பட்டதால் வெற்றியை இழந்தது. ஹாரிஸ் சோஹைல் 50 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. இலங்கை அணித் தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகள் வழங்கப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.