தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுபயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் புதிய உலக சாதனையைப் படைக்கும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. உள்ளூரில் விளையாடிய கடைசி 10 டெஸ்ட் தொடர்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. இதே போன்று உள்ளூரில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர் வெற்றிகளை இருமுறை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. ஸ்டீவ் வாஹ் மற்றும் மார்க் டெய்லர் ஆகிய இருவரும் தலைமை வகித்த ஆஸ்திரேலிய அணிகள், நவம்பர் 1994 முதல் நவம்பர் 2000 வரை ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர் வெற்றிகளை அடைந்தது. அடுத்ததாக மற்றொரு ஆஸி. கேப்டன் ரிக்கி பாண்டிங், ஜூலை 2004 முதல் நவம்பர் 2008 வரை தொடர்ச்சியாக உள்ளூரில் 10 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளார். இந்திய அணி, கடைசியாக 2012-13 சீஸனில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தது. அதன்பிறகு உள்ளூரில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.
எந்த ஓர் அணியும் உள்ளூரில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்றதில்லை. தற்போது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வதன் மூலம் அந்தச் சாதனையை நிகழ்த்தும் முனைப்பில் உள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.
உள்ளூரில் இந்திய அணியின் சமீபத்திய டெஸ்ட் தொடர் வெற்றிகள்: (10-0)
வெற்றி 4-0 vs ஆஸ்திரேலியா
வெற்றி 2-0 vs மே.இ. தீவுகள்
வெற்றி 3-0 vs தென் ஆப்பிரிக்கா
வெற்றி 3-0 vs நியூஸிலாந்து
வெற்றி 4-0 vs இங்கிலாந்து
வெற்றி 1-0 vs வங்கதேசம்
வெற்றி 2-1 vs ஆஸ்திரேலியா
வெற்றி 1-0 vs இலங்கை
வெற்றி 1-0 vs ஆப்கானிஸ்தான்
வெற்றி 2-0 vs மே.இ. தீவுகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிரிக்கெட்டுக்கு நடுவில் சுழல் காற்று! சிதறி ஓடிய இளைஞர்கள்! | Coimbatore

பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு நடிகைகள் இணையும் மகா சங்கமம்!
கொல்கத்தாவில் மமதா இறுதிக்கட்ட பிரசாரம்! நடந்து சென்று வாக்கு சேகரிப்பு!
ஜார்க்கண்டில் எந்தவொரு வாக்காளரையும் நீக்க காங்கிரஸ் அனுமதிக்காது!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


