/

இந்தியா தொடர்: மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இரு பிரபல வீரர்களுக்கு இடமில்லை!

இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்கிறது...

News image
Updated On :29 நவம்பர் 2019, 5:30 am

இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்கிறது. டிசம்பர் 6 அன்று முதல் டி20 தொடர் தொடங்கவுள்ளது. இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியச் சுற்றுப்பயணத்துக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரோன் பொலார்ட் தலைமையிலான அணியில் நட்சத்திர வீரர்களான ஆண்ட்ரே ரஸ்ஸலும் டுவைன் பிராவோவும் இடம்பெறவில்லை. சமீபத்தில் நடைபெற்ற அபுதாபி டி10 போட்டியில் ஆறு ஆட்டங்கள் விளையாடியும் ரஸ்ஸல், மே.இ. தீவுகள் அணியில் இடம்பெறவில்லை.

டி20 அணி: கிரோன் பொலார்ட் (கேப்டன்), ஃபெபியன் ஆலன், ஷெல்டன் காட்ரெல், ஹெட்மையர், ஹோல்டர், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கீமோ பால், கேரி பியரி, நிகோலஸ் பூராண், தினேஷ் ராம்தின், ரூதர்ஃபோர்ட், லெண்ட்ல் சிமண்ஸ், ஹேடன் வால்ஷ் ஜூனியர், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.

ஒருநாள் அணி: கிரோன் பொலார்ட் (கேப்டன்), சுனில் அம்ப்ரிஸ், ராஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், ஹெட்மையர், ஹோல்டர், ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோஷப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கீமோ பால், கேரி பியரி, நிகோலஸ் பூராண், ரொமாரியோ ஷெபர்ட், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.