சையத் முஷ்டாக் அலி டி20 போட்டி: தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!
15 ஓவர்களில் இலக்கை விரட்ட வேண்டும். இதுதான் தமிழக அணிக்கு விடுக்கப்பட்ட சவால்.


15 ஓவர்களில் இலக்கை விரட்ட வேண்டும். இதுதான் தமிழக அணிக்கு விடுக்கப்பட்ட சவால்.
இதை வெற்றிகரமாக எதிர்கொண்டு சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது தமிழ்நாடு அணி.
சூப்பர் லீக் குரூப் பி பிரிவில் சூரத்தில் இன்று நடைபெற்ற டி20 ஆட்டத்தில் தமிழகமும் ஜார்கண்ட் அணியும் மோதின. மும்பை, கர்நாடகா, பஞ்சாப், ஜார்கண்ட் என மிகவும் கடினமான பிரிவில் இடம்பெற்ற தமிழக அணி 3 ஆட்டங்கள் விளையாடி 2-ல் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தை வெல்லவேண்டிய கட்டாயத்தில் முதலில் பந்துவீசியது.
தமிழகச் சுழற்பந்துவீச்சாளர்களிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் ஜார்கண்ட் அணி, 18.1 ஓவர்களில் 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சுழற்பந்துவீச்சாளர்களான எம். சித்தார்த் 4 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும் சாய் கிஷோர், எம். அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார்கள். ஜார்கண்ட் அணியில் செளரப் திவாரி மட்டும் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார்.
இந்த இலக்கை 15 ஓவர்களுக்குள் விரட்டினால் அரையிறுதி நிச்சயம் என்கிற நிலையில் 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது தமிழக அணி. வாஷிங்டன் சுந்தர் 22 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 38 ரன்களும் தினேஷ் கார்த்திக் 13 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
வரும் 29 அன்று அரையிறுதி ஆட்டங்களும் டிசம்பர் 1 அன்று இறுதி ஆட்டமும் சூரத்தில் நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...