16 வருடம் 279 நாள்கள். இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுகமாகியுள்ள பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா-வின் வயது இது.
3 டி-20 ஆட்டங்கள் கொண்ட பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. இந்நிலையில், இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடா் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இன்று தொடங்கியுள்ளது. கேப்டன் டிம் பெயின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், அஸாா் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.
நசீம் ஷாவின் தாய் 10 நாள்களுக்கு முன்பு காலமானாா். இருப்பினும், மனதளவில் அவா் திடமாக இருக்கிறாா் என்கிற நம்பிக்கையுடன் அவரைத் தேர்வு செய்துள்ளது பாகிஸ்தான் அணி. தாய் இறந்ததற்கு அஞ்சலி செலுத்துவதற்குக் கூட நேரில் செல்ல முடியாத நிலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இன்று அறிமுகமாகியுள்ளார் நசீம் ஷா. தாய் இறந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் தர பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார். சோகம் காரணமாக முதல் இன்னிங்ஸில் அவர் பந்துவீசவில்லை. 2-வது இன்னிங்ஸில் வீசிய 8 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் எடுத்துக் கவனம் ஈர்த்தார். இந்த இளம் புயல் சர்வதேச கிரிக்கெட்டில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எண்ண வைத்தார்.
நசீம் ஷா இதுவரை ஏழு முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். இன்று டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானது மூலம் ஆஸ்திரேலியாவிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடிய இளம் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


