பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

டி20 உலகக் கோப்பைப் பிறகும் விளையாடுவேன்: மலிங்கா உறுதி

ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதோடு இன்னும் கூடுதலாக இரு வருடங்களுக்குத் தான் விளையாட வாய்ப்புள்ளதாக...

News image
Updated On :20 நவம்பர் 2019, 8:46 am

ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதோடு இன்னும் கூடுதலாக இரு வருடங்களுக்குத் தான் விளையாட வாய்ப்புள்ளதாக இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா கூறியுள்ளார்.

30 டெஸ்டுகள் விளையாடிய பிறகு 2011 ஏப்ரலில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் மலிங்கா. பிறகு 226 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய பிறகு இந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையுடன் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவேன் எனக் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.

எனினும் தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

டி20-யில் நான்கு ஓவர்கள் வீசினால் போதும். என்னிடமுள்ள திறமையைக் கொண்டு டி20 பந்துவீச்சாளராக என்னால் சமாளிக்க முடியும். உலகம் முழுக்க நடைபெறும் பல டி20 போட்டிகளில் கலந்துகொண்டுள்ளதால் ஒரு கேப்டனாக என்னால் மேலும் இரு ஆண்டுகள் விளையாட முடியும் என எண்ணுகிறேன். டி20 உலகக் கோப்பைக்கு நான் தான் கேப்டனாக இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்கள். ஆனால் இலங்கை கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.