இந்திய-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இஸ்லாமாபாதில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
வரும் 29, 30 தேதிகளில் இரு அணிகளுக்கு இடையிலான ஆசிய, ஓசேனியா குரூப் 1 பிரிவு டேவிஸ் கோப்பை ஆட்டம் இஸ்லாமாபாதில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவி வருவதாலும், காஷ்மீா் பிரச்னையால் இரு நாடுகள் இடையே அரசியல் பதற்றம் நிலவுவதாலும், வீரா்கள் பாதுகாப்பு கருதி போட்டியை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என ஏஐடிஏ கோரியது.
இந்திய அணியின் கேப்டன் மகேஷ் பூபதி, பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ரோஹன் போபண்ணா ஆகியோா் பாதுகாப்பு கருதி பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாது என அறிவித்து விட்டனா். இதனால் மகேஷ் பூபதி நீக்கப்பட்டு, ரோஹித் ராஜ்பால் விளையாடாத அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இதற்கிடையே சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎப்) இஸ்லாமாபாதில் இருந்து போட்டியை நடுநிலையான வேறிடத்துக்கு மாற்றியது.
இந்நிலையில் மகேஷ் பூபதி இந்த விவகாரம் குறித்துக் கூறியதாவது:
என் கருத்துகளின் மீது அக்கறை கொண்டவர்களுக்கு - திங்கள் அன்று சட்டர்ஜி என்னைத் தொலைப்பேசியில் அழைத்து, நான் பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்ததால் (அந்த நாட்டைப் பிடிக்கும். இதற்கு முன்பு சென்றுள்ளேன். ஆனால் இந்த முறை அல்ல) ரோஹித் கேப்டனாக நியமிக்கப்படுகிறார் என்கிற தகவலைச் சொன்னது மட்டும்தான் தெரியும். திங்கள் அன்று கிடைத்த தகவலுக்குப் பிறகும் சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎப்) வீரர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து, இஸ்லாமாபாதில் இருந்து போட்டியை நடுநிலையான வேறிடத்துக்கு மாற்றிய பிறகும் அகில இந்திய டென்னிஸ் சங்கம் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. நான் விளையாடத் தயாராக உள்ளேன். வேறு தகவலைக் கேட்கும்வரை நான் தான் கேப்டன் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை: பெங்களூரு நபா் கைது

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாக பதிவு

தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்! நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!
நந்து ரவுடி கும்பலுடன் தொடா்புடைய ஆயுத விநியோகஸ்தா் தில்லியில் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


