மகேஷ் பூபதியின் ஒப்பந்தம் முடிந்து விட்டது, கேப்டனை மாற்ற முடியாது: இந்திய டென்னிஸ் சங்கம்
டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியின் ஒப்பந்தம் முடிந்து விட்டது, எனவே கேப்டனை மாற்ற முடியாது என அகில இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.


டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியின் ஒப்பந்தம் முடிந்து விட்டது, எனவே கேப்டனை மாற்ற முடியாது என அகில இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இஸ்லாமாபாதில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
வரும் 29, 30 தேதிகளில் இரு அணிகளுக்கு இடையிலான ஆசிய, ஓசேனியா குரூப் 1 பிரிவு டேவிஸ் கோப்பை ஆட்டம் இஸ்லாமாபாதில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவி வருவதாலும், காஷ்மீா் பிரச்னையால் இரு நாடுகள் இடையே அரசியல் பதற்றம் நிலவுவதாலும், வீரா்கள் பாதுகாப்பு கருதி போட்டியை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என ஏஐடிஏ கோரியது.
இந்திய அணியின் கேப்டன் மகேஷ் பூபதி, பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ரோஹன் போபண்ணா ஆகியோா் பாதுகாப்பு கருதி பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாது என அறிவித்து விட்டனா். இதனால் மகேஷ் பூபதி நீக்கப்பட்டு, ரோஹித் ராஜ்பால் விளையாடாத அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இதற்கிடையே சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎப்) இஸ்லாமாபாதில் இருந்து போட்டியை நடுநிலையான வேறிடத்துக்கு மாற்றியது. இந்த விவகாரம் குறித்து மகேஷ் பூபதி கூறியதாவது: என் கருத்துகளின் மீது அக்கறை கொண்டவர்களுக்கு - திங்கள் அன்று சட்டர்ஜி என்னைத் தொலைப்பேசியில் அழைத்து, நான் பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்ததால் (அந்த நாட்டைப் பிடிக்கும். இதற்கு முன்பு சென்றுள்ளேன். ஆனால் இந்த முறை அல்ல) ரோஹித் கேப்டனாக நியமிக்கப்படுகிறார் என்கிற தகவலைச் சொன்னது மட்டும்தான் தெரியும். திங்கள் அன்று கிடைத்த தகவலுக்குப் பிறகும் சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎப்) வீரர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து, இஸ்லாமாபாதில் இருந்து போட்டியை நடுநிலையான வேறிடத்துக்கு மாற்றிய பிறகும் அகில இந்திய டென்னிஸ் சங்கம் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. நான் விளையாடத் தயாராக உள்ளேன். வேறு தகவலைக் கேட்கும்வரை நான் தான் கேப்டன் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜி இந்த விவகாரம் குறித்துக் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தற்போது கேப்டனை மாற்ற முடியாது. மகேஷ் பூபதியுடனான ஒப்பந்தம் 2018 உடன் முடிவடைந்து விட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தன்னால் பங்கேற்கமுடியாது என அவரே சொல்லிவிட்டார். எனவே தான் அவருக்குப் பதிலாக புதிய கேப்டனைத் தேர்வு செய்தோம் என்றார்.
நவம்பர் 9 அல்லது 10 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...