கிரிக்கெட் உலகில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கை போன்றவை வழக்கமாக பலம் மிக்க அணிகளாக திகழ்கின்றன. இவற்றுக்கு சவால் விடும் வகையில் இந்திய துணைக் கண்டத்தில் வங்கதேச அணியும் உருவாகியுள்ளது.
புலிகள் எனப்படும் வங்கதேச அணி கடந்த 1979-ஐசிசி கோப்பையில் பங்கேற்றது. கடந்த 1986-இல் முதல் ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்றது. அதே நேரத்தில் 1999 உலகக் கோப்பையில் முதன்முதலாக கலந்து கொண்டவங்கதேசம், பலம் வாய்ந்த பாகிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை வீழ்த்தியது. 2000-இல் ஐசிசியில் முழுமையான உறுப்பினர் அந்தஸ்து பெற்றது. 2003, 2007 2011 உலகக் கோப்பைகளிலும் பங்கேற்ற அந்த அணி, 2015-இல் காலிறுதி வரை முன்னேறியது.தற்போது இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியிலும் கலந்து கொள்கிறது.