மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கோலி சதம் வீண்: 3-ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியாவுடனான 3-ஆவது ஒருநாள் போட்டியில் கோலி சதமடித்தும் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. 

News image

புகைப்படம்: ஐசிசி/டிவிட்டர்

Updated On :8 மார்ச் 2019, 3:52 pm


ஆஸ்திரேலியாவுடனான 3-ஆவது ஒருநாள் போட்டியில் கோலி சதமடித்தும் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3-ஆவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் குவித்தது. 

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் விவரம்: https://www.dinamani.com/sports/sports-news/2019/mar/08/usman-khawajas-maiden-odi-century-3109866.html

இதையடுத்து, 314 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தவான் 1, ரோஹித் 14, ராயுடு 2 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து மோசமான துவக்கத்தை அளித்தனர். அதன்பிறகு, கோலியுடன் இணைந்து அணியை ஓரளவுக்கு சரிவில் இருந்து மீட்டார் தோனி. அவர் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸாம்பா பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, கோலியுடன் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த கூட்டணியில் கோலி பெரும்பாலான ஸ்டிரைக்கை எடுத்து துரிதமாக ரன் குவித்து வெற்றிக்கு தேவையான ரன் ரேட்டை கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார். இந்த ஜோடி நல்ல நிலையில் விளையாடி வந்தபோது ஜாதவ் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

எனினும், விராட் கோலி மீண்டும் விஜய் சங்கருடன் இணைந்து மீண்டும் இலக்கை நோக்கி துரிதமாக ரன் குவித்தார். இதன்மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அவர் 41-ஆவது சதத்தை பதிவு செய்தார். 

இதையடுத்து, 38-ஆவது ஓவரில் அடுத்தடுத்து 2 பந்துகளில் பவுண்டரி அடித்த கோலி 3-ஆவது பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். அவர் 95 பந்துகளில் 16 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 123 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு பொறுப்பை ஏற்று சற்று அதிரடியை வெளிப்படுத்திய சங்கரும் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, துரிதமாக ரன் குவிக்க திணறி வந்த ஜடேஜா 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால், இந்திய அணி 48.2 ஓவர்கள் முடிவில் 281 ரன்களுக்கு ஆட்டமிழந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்திய அணியில் விராட் கோலி அதிகபட்சமாக 123 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியான அதிகபட்ச ஸ்கோர் 32. இந்த 123 ரன்னுக்கும், 32 ரன்னுக்கும் இடையே இருக்கும் இடைவெளி ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை தீர்மானித்தது. 

இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற நிலையில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.