டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

புவனேஸ்வர் உடல்தகுதியில் சிக்கல்? இங்கிலாந்து விரையும் நவ்தீப் சைனி!  

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் புவனேஸ்வர் குமாருக்கு காலின் தொடைப் பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:20 am

Raghavendran

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் தனது 3-ஆவது ஓவரை வீச வந்த புவனேஸ்வர் குமாருக்கு காலின் தொடைப் பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் பந்துவீசாமல் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதிகபட்சம் 3 போட்டிகள் வரை பங்கேற்க வாய்ப்பில்லை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு சௌதாம்ப்டனில் உள்ள விடுதியின் படிகளில் ஏறும் போது புவனேஸ்வர் குமார் அசௌகரியமாக உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அடுத்த ஒரு வாரத்தில் புவனேஸ்வர் குமார் முழு உடல்தகுதியை அடைவார் என்று இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே ரஞ்சி மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி, வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இங்கிலாந்து விரைவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

ஐபிஎல் முடிந்த பின்னர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பிசிசிஐ உத்தரவிட்டதன் பேரில் நவ்தீப் சைனி தொடர்ந்து பயிற்சி பெற்று வந்ததார்.

மேலும் உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது ரிஷப் பண்ட் உடன் நவ்தீப் சைனியும் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.