டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விஜய் சங்கர் சிறப்பாக செயல்பட்டார்: சௌரவ் கங்குலி

தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் சிறப்பாக செயல்பட்டதாக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்தார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:18 am

Raghavendran

தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் சிறப்பாக செயல்பட்டதாக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்தார். இதுதொடர்பாக தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் புவனேஸ்வர் காயமடைந்தது இந்தியாவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. விளையாட்டில் காயங்கள் சாதாரணமானது. ஷிகர் தவனும் விரைவில் குணமடைவார் என நம்புகிறேன். 

விஜய் சங்கர் சிறப்பாக செயல்பட்டு தனக்கு கிடைத்த வாய்ப்பை ஒழுங்காக பயன்படுத்திக்கொண்டார். புவனேஸ்வர் குமார் இல்லாத வெற்றிடத்தை சரியாக பூர்த்தி செய்தார். தற்போதைய இந்திய அணி மிகச்சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ளது. எனவே நாம் அரையிறுதிக்கு முன்னேறுவது இயல்பான ஒன்றுதான்.

நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் ஆட்டங்கள் சிறப்பாக உள்ளன. எனவே அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் இந்தியா எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.