உங்கள் அன்புக்கு நன்றி: உருக்கமான விடியோ வெளியிட்ட ஷிகர் தவன்
ஷிகர் தவன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான விடியோப் பதிவை வெளியிட்டுள்ளார்.


ஷிகர் தவனுக்கு இடதுகை பெருவிரல் எலும்பு பகுதியில் ஏற்பட்டுள்ள முறிவு தீவிரமாக உள்ளது தெரியவந்தது. இதனால் வரும் ஜூலை மாதம் வரை அவருக்கு முறிவு பகுதியில் கட்டு போடப்பட வேண்டும். இதனால் தொடர்ந்து உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாது என்பதால் விலகினார்.
அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்தை சேர்க்க ஐசிசிக்கு பரிந்துரை செய்துள்ளோம் என அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஷிகர் தவன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான விடியோப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,
எனக்காக வேண்டிக்கொண்ட அனைவருக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பிட்ட நேரத்தில் எனது காயம் குணமாகாத காரணத்தால் நான் இந்திய அணியில் இருந்து விலகுகிறேன்.
இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகக் கோப்பையை நிச்சயம் வெல்லும். அதற்காக நீங்கள் அனைவரும் தொடர்ந்து பிரார்த்திக்க வேண்டுகிறேன். உங்கள் அனைவரது அன்புக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.
I feel emotional to announce that I will no longer be a part of #CWC19. Unfortunately, the thumb won’t recover on time. But the show must go on.. I'm grateful for all the love & support from my team mates, cricket lovers & our entire nation. Jai Hind!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...