ஆமிரை ஆக்ரோஷமாக எதிர்கொள்ள வேண்டும்: சச்சின் அறிவுரை
பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிரை ஆக்ரோஷமாக எதிர்கொள்ள வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.


பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிரை ஆக்ரோஷமாக எதிர்கொள்ள வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும். குறிப்பாக நல்ல ஆட்டத்திறனுடன் விளங்கும் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிருக்கு எதிராக தடுப்பாட்டம் ஆட வேண்டும் என்ற எதிர்மறை எண்ணத்துடன் களமிறங்கக் கூடாது.
ஆமிர் பந்துவீச்சை ஆக்ரோஷத்துடன் எதிர்கொண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நேர்மறை எண்ணம் மட்டுமே மிக முக்கியம். அதற்காக எல்லா பந்துகளையும் அதிரடியாக எதிர்கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால், ஆமிர் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது தான் மிக முக்கியம்.
இதில் வேறு எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் அதே ஆக்ரோஷத்துடன் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வேண்டியது அவசியம். விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்த பாகிஸ்தான் நிச்சயம் முன்னுரிமை அளிக்கும்.
எனவே இவர்கள் இருவர் அல்லாமல் இதர வீரர்கள் ஆமிரையும், ரியாஸையும் திறம்பட எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...