/

தோனி அதிரடி சிக்ஸரை வாயைப் பிளந்து வியந்த விராட் கோலியின் விடியோ

தோனியின் அதிரடி சிக்ஸரை வாயைப் பிளந்து வியந்து விராட் கோலி ரசித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:07 am

Raghavendran

தோனியின் அதிரடி சிக்ஸரை வாயைப் பிளந்து வியந்து விராட் கோலி ரசித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

இப்போட்டியின் 48-ஆவது ஓவரின் முதல் பந்தை மிட்செல் ஸ்டார்க் வீசினார். இதனை தோனி அதிரடியாக சிக்ஸர் விளாசினார். 87 மீட்டர் பறந்த இந்த சிக்ஸரை மறுமுனையில் நின்றிருந்த விராட் கோலி வாயைப் பிளந்து வியந்து ரசித்துக்கொண்டிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.