ஹஃபீஸ் அதிரடி: இங்கிலாந்துக்கு கடின இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
2019 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் திங்கள்கிழமை மோதின.


2019 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் திங்கள்கிழமை மோதின.
ட்ரெண்ட்ப்ரிட்ஜில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திய இமாம் உல் ஹக், ஃபகர் ஸமன் ஜோடி முறையே 44, 36 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய பாபர் அசாம் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 63, அதிகபட்சமாக முகமது ஹஃபீஸ் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 84 மற்றும் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது 5 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தனர். இதனால் பாகிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மார்க் உட் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...