எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ராணுவப் பணி: தோனிக்கு 'சல்யூட்' அடித்த மே.இ.தீவுகள் வீரர்!

ராணுவப் பணியில் ஈடுபடும் தோனிக்கு மே.இ.தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரல் பாராட்டு தெரிவித்தார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:40 am

Raghavendran

ராணுவப் பணியில் ஈடுபடும் தோனிக்கு மே.இ.தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரல் பாராட்டு தெரிவித்தார். ஜமைக்கா பாதுகாப்புத்துறை வீரராக பணியாற்றி வரும் ஷெல்டன் காட்ரல், தோனி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட்டில் களத்துக்கு உள்ளேயும், வெளியிலும் சிறந்த முன் உதாரணமாகத் திகழ்கிறார். அவரது தேசப்பற்று மிகச்சிறப்பானதாக உள்ளது என்றார்.

மேலும் ஒரு விடியோப் பதிவையும் பகிர்ந்துள்ளார்.

அதில், எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த விடியோ பதிவை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் ஒரு ராணுவ வீரான நான் எவ்வளவு பெருமிதம் கொள்வேன் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

இந்த இடத்தில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையிலான அந்த தருணம் மனைவியின் மீதும் நாட்டின் மீதும் தோனி வைத்துள்ள அன்பை வெளிக்காட்டுகிறது. இதை கண்டு நான் மகிழ்ச்சியடைந்தது போன்று நீங்களும் மகிழுங்கள் என்று பதிவிட்டுள்ளார். 

மேற்கிந்திய தீவுகள் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான ஷெல்டன் காட்ரல், விக்கெட் வீழ்த்திய உடன் சல்யூட் அடித்து கொண்டாடுவது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.