திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விராட் கோலி, ரோஹித் ஷர்மா இடையே வலுக்கும் கருத்து வேறுபாடு?

கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் வலுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:38 am

Raghavendran

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் வலுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்திய அணி இரு தரப்பாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் விராட் கோலி பக்கத்தை ஏற்கனவே பின்தொடர்வதை நிறுத்தியிருந்த ரோஹித் ஷர்மா தற்போது அவரது மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா பக்கத்தை பின்தொடர்வதையும் நிறுத்தியுள்ளார். 

Story image

இதற்கெல்லாம் இந்திய அணியில் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் ஏற்படுத்திய சில கட்டுப்பாடுகள் காரணமாக இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

நடந்து முடிந்த உலகக் கோப்பையில் குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே வீரர்களுடன் அவர்களுடைய குடும்பத்தினர் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், ரோஹித் ஷர்மா இக்காலக்கெடுவை மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Story image

மேலும் அணித் தேர்வு மற்றும் செயல்பாடுகளிலும் உள்ள சில நடவடிக்கைகள் ரோஹித்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக அணி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இருவரும் இதுதொடர்பான பிரச்னையை எழுப்பும் வரை அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை என்று உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிஓஏ குழு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், ரோஹித் ஷர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை விராட் கோலி பின்தொடர்ந்து வருகிறார். ஆனால், அவருடைய மனைவி ரித்திகா சஜ்தேஷ் பக்கத்தை பின்தொடர்வதில்லை. அதேபோன்று ரோஹித், ரித்திகா ஆகிய இருவரின் இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் அனுஷ்கா ஷர்மா பின்தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.