திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தோனி, ராயுடு முடிவு சூழ்நிலைகளுக்கு ஏற்ப எடுக்கப்பட்டது: எம்.எஸ்.கே.பிரசாத்

மகேந்திர சிங் தோனி மற்றும் அம்பத்தி ராயுடு தொடர்பான முடிவுகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:36 am

Raghavendran

மகேந்திர சிங் தோனி மற்றும் அம்பத்தி ராயுடு தொடர்பான முடிவுகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார். 

இதுதொடர்பாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியை ஞாயிற்றுக்கிழமை அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் மகேந்திர சிங் தோனி பங்கேற்கவில்லை. இருப்பினும் அடுத்து வரவுள்ள உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு எதிர்கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கி அவரது செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க உள்ளோம். 

அம்பத்தி ராயுடு, டி20 ஆட்டத்தின் வெளிப்பாடுகளின் அடிப்படையிலேயே ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதனால் சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால், அதில் எங்களுக்கு வேறு திட்டங்கள் தொடர்பான யோசனைகளும் இருந்தன. அவர் உடல்தகுதியில் தோல்வியுற்றபோது கூட அதற்கான பயிற்சியிலும் ஈடுபடுத்தினோம்.

அணித் தேர்வு தொடர்பான சில திட்டங்களின் அடிப்படையிலேயே அம்பத்தி ராயுடு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதனால் நாங்கள் ஒரு சார்பாக செயல்படுவதாகக் கூறுவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.