திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மே.இ.தீவுகள் தொடர்: இந்திய அணித் தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு

ஆகஸ்ட் மாதம் இந்திய-மே.இ.தீவுகள் இடையே அமெரிக்கா மற்றும் மே.இ.தீவுகளில் தலா 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் நடக்கின்றன. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:35 am

Raghavendran

ஆகஸ்ட் மாதம் இந்திய-மே.இ.தீவுகள் இடையே அமெரிக்கா மற்றும் மே.இ.தீவுகளில் தலா 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் நடக்கின்றன. 

ஒருநாள் தொடர் ஆக. 3-இல் தொடங்குகிறது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் ஆக. 22-இல் தொடங்குகிறது. 

முதலில் 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ப்ரோவார்ட் கௌன்டி மைதானத்தில் ஆகஸ்டு 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முதல் இரு போட்டிகளும், கயானாவில் ஆகஸ்டு 6-ஆம் தேதி 3-ஆவது போட்டியும் நடைபெறவுள்ளது.

பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஆகஸ்டு 8-ல் கயானாவிலும், 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ட்ரினிடட்டிலும் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

இதையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஆண்டிகுவா விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்டு 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், ஜமைக்காவின் சபைனா பார்க்கில் ஆகஸ்டு 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை 2-ஆவது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. 

இதற்கான அணியை தேர்வு செய்ய மத்திய தேர்வாளர் குழு ஜூலை 19-ஆம் தேதி மும்பையில் கூட உள்ளதாக பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது.

 ஆனால், இந்திய அணி தேர்வு திட்டமிட்டபடி நடைபெறாது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்தது.

இந்நிலையில், ஜூலை 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11:30 மணியளவில் மும்பையில் இத்தொடருக்கான இந்திய அணித் தேர்வு நடைபெறும் என்று பிசிசிஐ சனிக்கிழமை அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.