தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

5 ஆயிரம் ரன்களைக் கடந்து லாரா சாதனையை சமன் செய்த ஷிகர் தவன்!

இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன் 5 ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:57 am

Raghavendran

இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன் 5 ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளார். இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தின்போது அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

இதன்மூலம் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களைக் கடந்த இந்தியர்களில் 118 இன்னிங்ஸ்களுடன் 2-ஆம் இடத்தைப் பிடித்தார். 114 இன்னிங்ஸ்களுடன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். 126 இன்னிங்ஸ்களுடன் சௌரவ் கங்குலி 3-ஆவது இடத்தில் உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சௌரவ் கங்குலி, க்ரீம் ஸ்மித் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களைக் கடந்த இடதுகை பேட்ஸ்மேன்களின் பட்டியலில் பிரையன் லாரா உடன் ஷிகர் தவன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.  

ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள் பட்டியலில் 101 இன்னிங்ஸ்களுடன் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.