தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

2019 ஐபிஎல் இந்தியாவில்! பிசிசிஐ அறிவிப்பு

2019-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டித் தொடர் இந்தியாவிலேயே நடத்தப்படும் என பிசிசிஐ நிர்வாகக் குழு செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:50 am

Raghavendran

2019-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டித் தொடர் இந்தியாவிலேயே நடத்தப்படும் என பிசிசிஐ நிர்வாகக் குழு செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது.

2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் மார்ச் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போட்டி அட்டவணை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 

அப்போது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 
மே மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதால், ஐபிஎல் போட்டி மார்ச் தொடங்கி மே மாதம் மத்தியில் வரை நடைபெறலாம் எனத் தெரிகிறது.

மேலும் தற்போது வரை கடைபிடிக்கப்பட்டு வரும் ஹோம், அவே மாதிரி அட்டவணைக்கு மாற்றாக கேரவேன் முறை கடைபிடிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தேர்தல் நடைபெறும் இடங்களில் அல்லாது மாற்று மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். எனவே இம்முறை பெரும்பாலான மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்த வாய்ப்புள்ளன.

முன்னதாக, 2009 பொதுத் தேர்தலால் ஐபிஎல் ஆட்டங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு மற்றப்பட்டன. 2014 பொதுத் தேர்தலின் போது ஒரு பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.