ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இந்த வீரர் என்ன தவறு செய்தார்?: தேர்வுக்குழுவினரைச் சாடும் ஹர்பஜன் சிங்!

என்ன தவறு செய்தார் என எண்ணிப் பார்க்கிறேன். ஏன் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறை உள்ளது..

News image
Updated On :24 டிசம்பர் 2019, 10:41 am

இந்திய கிரிக்கெட் அணியில் திறமைசாலிகள் இடம்பெறவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் ஹர்பஜன் சிங். பல இளம் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக தன் ட்விட்டர் கணக்கு வழியாக அவர்களுக்குப் பாராட்டு தெரிவிப்பார். தற்போது, 29 வயது மும்பை வீரரான சூர்ய குமார் யாதவுக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளார். 

ட்விட்டரில், ஹர்பஜன் சிங் கூறியதாவது:

இந்தியா, இந்தியா ஏ, இந்தியா பி அணிகளுக்குத் தேர்வானவர்களைப் போல ரன்களைக் குவிப்பதைத் தவிர சூர்ய குமார் யாதவ் என்ன தவறு செய்தார் என எண்ணிப் பார்க்கிறேன். ஏன் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறை உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆகிய இரு தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் சூர்ய குமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் அடுத்த மாதம், இந்திய ஏ அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து, ஒருநாள் மற்றும் நான்கு நாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. இதற்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான இந்தியா ஏ ஒருநாள் அணியில் சூர்ய குமார் யாதவுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.