வில்லியம்ஸின் அன்றைய ‘நோட்புக்’ கொண்டாட்டத்துக்கு அதே பாணியில் பதிலடி தந்த விராட் கோலி! (இரு விடியோக்களும் இணைப்பு)
என் விக்கெட்டை வீழ்த்தியபிறகு நோட் புக்கில் என் பெயரை அடிப்பது போல சைகை செய்தார் வில்லியம்ஸ்....


இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 207/5 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை எடுத்து வென்றது. 6 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 50 பந்துகளில் 94 ரன்களை விளாசிய கேப்டன் கோலி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
16-வது ஓவரின் போது மே.இ. வேகப்பந்துவீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸின் பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் இந்திய கேப்டன் விராட் கோலி. சிக்ஸ் அடித்த பிறகு, கோபத்துடன் தன்னுடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஏதோ பேப்பரை எடுத்து பந்துவீச்சாளரின் பெயரை டிக் செய்வது போல சைகை செய்தார். பந்துவீச்சாளருக்கு எதனால் இப்படி ஒரு பதிலடி தருகிறார் என்று பலருக்கும் ஆச்சர்யம் ஏற்பட்டது. ஆட்டம் முடிந்த பிறகு இதற்கு விளக்கம் அளித்தார் விராட் கோலி. அவர் கூறியதாவது:
2017 ஜமைக்கா டி20 ஆட்டத்தில் என் விக்கெட்டை வீழ்த்தியபிறகு நோட் புக்கில் என் பெயரை அடிப்பது போல சைகை செய்தார் வில்லியம்ஸ். அதை அப்போதிருந்து நான் ஞாபகம் வைத்திருந்தேன். ஆட்டம் முடிந்தபிறகு இருவரும் ஹைஃபை கொடுத்துக்கொண்டோம். தீவிரமாக விளையாட வேண்டும். அதே சமயம், எதிரணி வீரர்களை மதிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
2017-ல் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் கோலியை 39 ரன்களில் வீழ்த்தினார் வில்லியம்ஸ். அந்த விடியோவும் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

விராட் கோலியின் செயலை இந்த விடியோவில் பாருங்கள். (2.12 முதல்...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...