இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்கிறது. இன்று முதல் டி20 தொடர் தொடங்கவுள்ளது. ஹைதராபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு முதல் டி20 ஆட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் டிசம்பர் 15 முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் ஆட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
அடுத்த வாரம் ஞாயிறு அன்று நடைபெறவுள்ள கிரிக்கெட் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சேப்பாக்கம் மைதானத்தின் சி, டி, ஈ பகுதிகளுக்கான கீழ் வரிசையில் ஒரு டிக்கெட்டின் விலை - ரூ. 1200. அதே பகுதிகளின் மேல்வரிசையில் ஒரு டிக்கெட்டுக்கான விலை - ரூ. 2400. மேலும் ரூ. 4,800, ரூ. 6,500, ரூ. 8000, ரூ.12,000 ஆகிய விலைகளுக்கான டிக்கெட்டுகளும் விற்பனைக்கு உள்ளன. மேலும் நீண்ட நாளாகச் சிக்கலில் உள்ள ஐ,ஜே,கே கேலரிகள் திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஞாயிறு முதல் டிக்கெட்டுகள் சேப்பாக்கம் மைதானத்திலும் இணையத்தளங்களிலும் விற்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு திடீர் ஒத்திவைப்பு!
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


