நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

லாராவின் 400 ரன்கள் சாதனையை முறியடிக்க இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்: வார்னர் நம்பிக்கை!

முச்சதம் அடித்த டேவிட் வார்னரை நேரில் சந்தித்து, பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த 335 ரன்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்...

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:24 pm

எழில்

முச்சதம் அடித்த டேவிட் வார்னரை நேரில் சந்தித்து, பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த 335 ரன்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னாள் வீரர் பிரையன் லாரா. 

லாராவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ள வார்னர், லாராவைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இன்னொரு தடவை லாராவின் 400 ரன்கள் சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறியுள்ளார். 

அடிலெய்ட் பகலிரவு டெஸ்டில், ஆஸ்திரேலிய அணி 127 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தார் ஆஸி. கேப்டன் டிம் பெயின். வார்னர் 335, வேட் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். வார்னர், லாராவின் சாதனையான 400 ரன்களைத் தாண்டுவார் என ரசிகர்கள் விருப்பப்பட்டார்கள். எனினும் அணியின் நலனை முன்னிறுத்தி டிக்ளேர் செய்தார் ஆஸி. கேப்டன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.