பரோடாவுக்கு எதிராக விளையாடவுள்ள மும்பை ரஞ்சி அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, தொடக்க வீரர் பிருத்வி ஷா போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள். 41 தடவை ரஞ்சிப் போட்டியை வென்றுள்ள மும்பை அணி, டிசம்பர் 9 அன்று பரோடாவுக்கு எதிராகத் தனது முதல் ரஞ்சி ஆட்டத்தை விளையாடவுள்ளது. மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் ஆதித்ய தரே துணை கேப்டனாகவும் செயல்படவுள்ளார்கள்.
கடந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட்களில் ஆடி ஒரு சதமும் ஒரு அரை சதமும் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் பிருத்வி ஷா. பின்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தபோது இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. இதன்பிறகு, தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்திய புகார் தொடர்பாக பிருத்வி ஷாவுக்கு 8 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. இதனால் சமீபகாலமாக இந்திய டெஸ்ட் அணியில் பிருத்வி ஷாவால் இடம்பெற முடியவில்லை. இதையடுத்து இந்த வருட ரஞ்சிப் போட்டியில் நன்கு விளையாடி இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் முனைப்பில் உள்ளார் பிருத்வி ஷா.
மும்பை அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஆதித்ய தரே (துணை கேப்டன்), ரஹானே, பிருத்வி ஷா, ஜே பிஷ்டா, ஷுபம் ரஞ்சனே, ஆகாஷ் பார்கர், சர்ஃபராஷ் கான், ஷாம்ஸ் முலானி, வினாயக் போயிர், ஷஷாங் அட்டார்டே, ஷர்துல் தாக்குர், துஷார் தேஷ்பாண்டே, தவால் குல்கர்னி, ஏக்நாத் கேர்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


