இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அண்மையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். ஆன்டிகுவாவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்னதாக கேப்டன் விராட் கோலி மற்றும் க்ரிக்கெட் அணியினர் பலரும் கடற்கரைக்குச் சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட தங்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஜாலியாக பகிர்ந்துள்ளனர். பும்ரா, கோலி உள்ளிட்ட அணியின் அனைத்து உறுப்பினர்களும் தங்களின் படங்களை வெளியிட்டிருந்தனர்.
இவற்றுள், கோலியுடனான பும்ராவின் புகைப்படம் சிலரின் கவனத்தை ஈர்த்தது. காரணம், பும்ரா அணிந்திருந்த 'பாக்ஸர்’ ப்ராண்ட் உள்ளாடையை மீறி உடல் தெரிந்ததாக சமூக வலைத்தளத்தில் அவரை ட்ரோல் செய்தனர். சில விஷமமான விமரிசனங்களையும் அவர் சந்திக்க நேர்ந்தது. அந்தப் புகைப்படம் மோசமானதாக இருப்பதாக சிலர் கிண்டல் செய்துள்ளனர்.
இதற்கெல்லாம் சற்றும் அசராத பூம்ரா தனக்கு எதிரான ட்ரோல்களுக்கு பதிலளித்தார், 'வேடிக்கையான ஓர் உண்மை: ஒளி நிழல்களைப் புரிந்து கொள்வதில் இந்நாட்களில் பலருக்கு எளிதல்ல. மக்கள் இதிலிருந்து விரைவில் மீள்வார்கள் என்று நம்புகிறேன்’ என்று பதிவிட்டார்.
உலகின் நம்பர்-1 பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா (25), அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் எனும் சாதனையை வெள்ளிக்கிழமை படைத்தார். மே.இ.தீவுகள் உடனான டெஸ்ட் போட்டியின் போது பும்ரா இந்த புதிய சாதனையைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


