எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

காஷ்மீரில் கிரிக்கெட் அகாதெமி தொடங்குகிறாரா தோனி?

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (37) ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் அகாதெமி தொடங் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:47 am

Raghavendran

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (37) ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் அகாதெமி தொடங் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ள தோனி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 15 வரை தங்கி பாராசூட் ரெஜிமண்டில் பயிற்சி பெற்று வருகிறார். எனினும் அவர் ராணுவத்தின் தாக்குதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனிடையே அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் விதமாக அங்கு கிரிக்கெட் அகாதெமி தொடங்க தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தில் விரைவில் உரிய அனுமதி பெற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.