நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தினேஷ் கார்த்திக்குக்கு கல்தா! முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:02 pm

Raghavendran

இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. தற்போது 2 டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றிபெற்றதையடுத்து 2-ஆவது டெஸ்ட் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. பின்னர் 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. 

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் ஆசியக் கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் ஷர்மா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆசியக் கோப்பையில் இடம்பிடித்திருந்த தினேஷ் கார்த்திக் பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி விவரம் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணைக்கேப்டன்), ஷிகர் தவன், அம்பத்தி ராயுடு, மணீஷ் பாண்டே, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது, ஷர்துல் தாக்கூர், கே.எல்.ராகுல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.