ஒருநாள் தொடரில் இருந்து விலகிய கெயில்: மே.இ.தீவுகள் அணியின் முழு விவரம்
முன்னணி வீரர் கிறிஸ் கெயில் ஒருநாள் அணியில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.


இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்காந மேற்கிந்திய தீவுகள் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் சூழலில் 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடர்களுக்கான அணிகளும் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதில், முன்னணி வீரர் கிறிஸ் கெயில் ஒருநாள் அணியில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சொந்த காரணங்களுக்காக அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் டி20 அணியில் இடம்பெற்றுள்ளார். அதுபோன்று நீண்ட இடைவேளைக்குப் பிறகு டேரன் பிராவோ, கெய்ரன் பெல்லார்டு, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால் சுனில் நரேன், டுவைன் பிராவோவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி விவரம்:
ஜேஸன் ஹோல்டர் (கேப்டன்), ஃபேபியன் அலென், சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷூ, சந்திரபால் ஹேம்ராஜ், ஷிம்ரான் ஹெத்மேய்ர், ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோஸப், இவன் லீவிஸ், ஆஷ்லி நர்ஸ், கீமோ பவல், ரோவ்மேன் பவல், கீமர் ரோச், மார்லன் சாமுவேல்ஸ், ஓஷானே தாமஸ்.
டி20 தொடருக்கான மே.இ.தீவுகள் அணி விவரம்:
கார்லஸ் பிரத்வெயிட் (கேப்டன்), ஃபேபியன் அலென், டேரன் பிராவோ, ஷிம்ரான் ஹெத்மெய்ர், இவன் லீவிஸ், ஓபேட் மெக்காய், ஆஷ்லி நர்ஸ், கீமோ பால், காரி பெய்ரி, கெய்ரன் பொல்லார்டு, ரோவ்மேன் பவல், தினேஷ் ராம்தின், ஆண்ட்ரே ரசல், ஷெர்ஃபேன் ரூத்ஃபோர்ட், ஓஷானே தாமஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...