2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இந்தியாவுக்கு எதிரான அயர்லாந்து அணியில் இடம்பிடித்த மொஹாலி வீரர்

இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடவுள்ள அயர்லாந்து அணியில் மொஹாலியைச் சேர்ந்த வீரர் இடம்பிடித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:02 pm

Raghavendran

இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடவுள்ள அயர்லாந்து அணியில் மொஹாலியைச் சேர்ந்த வீரர் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி, அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான அயர்லாந்து அணியில் இந்திய வம்சாவளி வீரரான மொஹாலியைச் சேர்ந்த சிம்ரன்ஜித் சிங் (வயது 31) இடம்பிடித்துள்ளார்.

சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான இவர் சமீபத்தில் நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார். அதில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து அவர் கூறியதாவது:

மொஹாலி அணிக்கு விளையாடிய நாள் முதல் இந்திய அணியில் இடம்பிடிப்பதுதான் எனது லட்சியமாக இருந்தது. அப்போது பஞ்சாப் அணியில் இடம் கிடைக்காத காரணத்தால் மேற்படிப்புக்காக அயர்லாந்து வந்தேன். இந்நிலையில், கடந்த ஆண்டு எனக்கு அயர்லாந்து குடியுரிமை கிடைத்தது. மேலும் அயர்லாந்து கிரிக்கெட் அணியில் விளையாடவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அயர்லாந்தில் நானும் பயிற்சி மேற்கொண்டு, சிறுவர்களுக்கும் பயிற்சி அளித்து வரும் அதே மைதானத்தில் தற்போது இந்திய அணிக்கு எதிராக விளையாடவுள்ளேன். இது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஸ்காட்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளுடன் சிறப்பாக செயல்பட்டிருக்கிறேன். அது எனது ஆட்டத்திறனையும் மேம்படுத்தியுள்ளது. எனது வாழ்நாளில் இது மிகப்பெரிய தருணம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.