வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஹாட்ரிக் சதமடித்த முரளி விஜய் புது சாதனை!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த முரளி விஜய், இரு புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 3:57 pm

Raghavendran

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வியாழக்கிழமை தொடங்கியது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.

இதில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. மேலும் இரண்டே நாட்களில் இந்தப் போட்டியும் நிறைவடைந்தது. அதிலும் குறிப்பாக 2-ஆம் நாள் ஆட்டத்திலேயே ஆப்கானிஸ்தான் அணி இரு இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழந்துள்ளது.

இந்நிலையில், இந்தப் போட்டியில் சதமடித்த துவக்க வீரர் முரளி விஜய், இரு புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். 153 பந்துகளைச் சந்தித்து 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரின் உதவியோடு 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

இதன்மூலம் முன்னாள் இங்கிலாந்து வீரர் டாம் க்ராவெனி மற்றும் ஏ.ப்ரின்ஸ் ஆகியோரது சாதனைகளை முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 2-ஆவது இன்னிங்ஸில் சதமடிக்காமல் முதல் இன்னிங்ஸில் மட்டும் அதிக சதங்கள் அடித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் மட்டும் இதுவரை 12 சதங்களை பதிவு செய்துள்ள விஜய், 2-ஆவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக 2014-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் 99 ரன்கள் சேர்த்துள்ளார்.

அதுபோல இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சதமடித்த துவக்க வீரர்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தைப் பிடித்தார். கடைசியாக இலங்கைக்கு எதிராக நாக்பூரில் 128, இலங்கைக்கு எதிராக புது தில்லியில் 155 மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் 105 ரன்கள் என கடைசி 3 போட்டியிலும் ஹாட்ரிக் சதமடித்துள்ளார். 

2-ஆம் இடத்தை இந்தியாவின் கௌதம் கம்பீர் மற்றும் இங்கிலாந்தின் அலஸ்டைர் கூக் ஆகியோருடன் பகிர்ந்துகொண்டுள்ளார். தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து இந்தியாவின் அதிரடி துவக்க வீரர் வீரேந்திர சேவாக் முதலிடத்தில் உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.