வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆசிஷ் நெஹ்ரா அறிவுறுத்தலின் பேரில் 'அதை' செய்யத் தொடங்கினேன்: உமேஷ் யாதவ்

'விதர்பா எக்ஸ்பிரஸ்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் உமேஷ் யாதவ்,கடந்த சீசனில் இந்திய மண்ணில் நடைபெற்ற 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:16 pm

Raghavendran

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களின் ஒருவராக உமேஷ் யாதவ் திகழ்கிறார். 'விதர்பா எக்ஸ்பிரஸ்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் உமேஷ் யாதவ், கடந்த சீசனில் இந்திய மண்ணில் நடைபெற்ற 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுபோல நடந்து முடிந்த 11-ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 20 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 

இந்நிலையில், தனது பந்துவீச்சில் நேர்த்தியை மேம்படுத்தியது தொடர்பாக உமேஷ் யாதவ் கூறியதாவது:

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் எனது பந்துவீச்சில் நேர்த்தியை கூட்டியுள்ளேன். இவை அனைத்துக்கும் ஆசிஷ் நெஹ்ரா தான் முக்கிய காரணம். பொதுவாக எனது
பந்துவீச்சு முறையை பேட்ஸ்மேன்கள் எளிதில் கணிக்கத் தொடங்கினர். எனவே எனது பந்துவீச்சு முறைக்கு ஏற்றவாறு ஆசிஷ் நெஹ்ரா சிறந்த பயிற்சி முறையை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதை அவரும் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைபிடித்து வந்துள்ளார்.

ஒரு ஸ்டம்ப்பை மட்டுமே வைத்து வலைப்பயிற்சி செய்யும் முறைதான் அது. மேலும் பந்தை நேராக வீசும் முறையையும் பழகச் சொன்னார். இதனால் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசும் போதும் அது உதவிகரமாக அமைந்தது. மேலும் வருங்காலத்தில் நடைபெறவுள்ள தொடர்களை கவனத்தில் கொண்டு எஸ்.ஜி. மற்றும் ட்யூக் ஆகிய பந்துகளைக் கொண்டு பயிற்சி பெற அறிவுறுத்தினார். 

அதுபோல தொடர்ச்சியாக சரியான இடத்திலும், திசையிலும் பந்துவீச கற்றுக்கொண்டேன். இதனால் எனது பந்துவீச்சில் நேர்த்தி அதிகரித்துள்ளது. இதையே ஐபிஎல் தொடரிலும் வெற்றிகரமாக செயல்படுத்தினேன். எனது பந்துவீச்சு மேம்பட்டதற்கு ஆசிஷ் நெஹ்ரா தான் முக்கிய காரணம் என்றார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.