2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பாலியல் சீண்டல்? கிரிக்கெட் வீரர் காம்ப்ளி மனைவி, பாலிவுட் பாடகரின் தந்தை இடையே லடாய்

பாலிவுட் பாடகர் அங்கித் திவாரியின் தந்தை ராஜ் குமார் திவாரி எனது மனைவி ஆண்ட்ரியா ஹீவைட் இடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:07 pm

Raghavendran

மும்பையில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மனைவி ஆண்ட்ரியா ஹீவைட் மற்றும் பிரபல பாலிவுட் பாடகர் அங்கித் திவாரியின் தந்தை ராஜ் குமார் திவாரிக்கும் இடையே பாலியல் சீண்டல் தொடர்பாக சண்டை ஏற்பட்டது. இதில் வினோத் காம்ப்ளியின் மனைவி அந்த பாலிவுட் பாடகரின் தந்தையை அடித்துள்ளார்.

இதுகுறித்து வினோத் காம்ப்ளி கூறுகையில்,

நானும் எனது மனைவியும் அந்த வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்துகொண்டிருந்த போது பாலிவுட் பாடகர் அங்கித் திவாரியின் தந்தை ராஜ் குமார் திவாரி எனது மனைவி ஆண்ட்ரியா ஹீவைட் இடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது எனது மனைவி அவரை அடித்தார். இதில் தனக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு உடனடியாக தனது நிலைப்பாட்டை எனது மனைவி எடுத்தார். இதை நான் வரவேற்கிறேன்.

Story image

மேலும் ஆண்ட்ரியா கூறியதாவது:

என் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர், தேவையற்ற விதமாகவும் என்னிடம் பேசினார். எனவே இவ்விவகாரத்தில் நான் எடுத்த முடிவு மிகவும் சரியானது தான். அப்போது அவரது மகன்கள் உடனடியாக என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளேன் என்றார்.

ஆனால் ராஜ் குமார் திவாரியை அச்சமயத்தில் என்னையும், எனது மனைவியையும் மிரட்டினார். எனவே இதுகுறித்து பங்கூர் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என்றார். மேலும் பாலிவுட் பாடகர் அங்கித் திவாரியின் தந்தை ராஜ் குமார் திவாரியும் அதே காவல் நிலையத்தில் வினோத் காம்ப்ளி மனைவி ஆண்ட்ரியா மீது புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. ஆனால், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.