2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளோம்: விராட் கோலி சூளுரை

இந்த தொடர் முழுவதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளோம். இதில் எங்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:07 pm

Raghavendran

இந்த தொடர் முழுவதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளோம். இதில் எங்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துடன் 3 டி 20, 3 ஒரு நாள், 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர்களில் மோதுகிறது. ஜூலை 3, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டி 20 ஆட்டங்களும், 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டிகளும்,  ஆகஸ்ட் 1 முதல் 5 வரை முதல் டெஸ்ட், 9 முதல் 13 வரை 2-ஆவது டெஸ்ட், 18 முதல் 22 வரை 3-ஆவது டெஸ்ட், ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3 வரை 4-ஆவது டெஸ்ட், செப்டம்பர் 7 முதல் 11 வரை 5-ஆவது டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

டி20 போட்டிகளில் எங்களுக்கு போதுமான அனுபவம் உள்ளது. எனவே நாங்கள் அனைவருமே இந்த தொடருக்கு தயாராக உள்ளோம். ஒரு சிறந்த அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகச் சிறப்பானது. நிச்சயம் இங்கிலாந்துக்கு கடும் சவால் அளிப்போம். இந்த தொடர் முழுவதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளோம். இதில் எங்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால், கற்றுக்கொள்ள நிறை உள்ளது. அப்போது தான் ஒரு அணியாக முன்னேற முடியும். 

அதுபோல இந்த தொடரில் அனைவருக்கு வாய்ப்பு வழங்க உள்ளேன். எனவே எங்களின் நிலைப்பாட்டில் சில ஆச்சரியங்கள் இருக்கக்கூடும். இந்த தொடர் துவங்க உள்ள நிலையில், மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். இங்கிலாந்தில் விளையாடுவது என்பதே தனி சவால்தான். மேலும் அணித் தேர்விலும் சில மாற்றங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். டி20 மட்டுமல்லாது ஒருநாள் தொடர்களிலும் இந்திய அணியின் செயல்பாடு வித்தியாசமானதாகவே இருக்கும். அடுத்து இங்கு உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால், இப்போதே அதற்கு தயாராக இந்த தொடரை சிறந்த களமாக பயன்படுத்த விரும்புகிறோம் என்றார்.

Story image

இதனிடையே, ஐபிஎல் தொடரில் பங்கேற்றது எங்களுக்கு சில சாதகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில அனுபவங்களைப் பெற்றுள்ளோம். அவை இதுபோன்ற மிகப்பெரிய தொடரில் செயல்படுத்த எங்கள் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும். எனவே அந்த அனுபவம் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.