தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விஜய் ஹஸாரே கோப்பை: கர்நாடகா சாம்பியன்!

41 ரன்கள் வித்தியாசத்தில் இறுதி ஆட்டத்தை வென்ற கர்நாடக அணி, விஜய் ஹஸாரே கோப்பையை வென்றுள்ளது... 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:21 pm

எழில்

41 ரன்கள் வித்தியாசத்தில் இறுதி ஆட்டத்தை வென்ற கர்நாடக அணி, விஜய் ஹஸாரே கோப்பையை வென்றுள்ளது. 

கர்நாடகம்-செளராஷ்டிரம் அணிகள் மோதிய இறுதி ஆட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. 

செளராஷ்டிரம் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

கர்நாடக அணி 45.5 ஓவர்களில் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த சீசன் முழுக்க அதிரடியாக விளையாடி வரும் மயங்க் அகர்வால் இன்றும் பிரமாதமாக விளையாடி 79 பந்துகளில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் எடுத்தார். சமர்த் 48, தேஷ்பாண்டே 49 ரன்கள் எடுத்தார்கள். செளராஷ்டிர அணியின் மக்வானா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் ஓவரிலிருந்து கர்நாடக அணி சிறப்பாகப் பந்துவீசி செளராஷ்டிர அணியைத் தடுமாற வைத்தது. முதல் ஓவரின் கடைசிப் பந்தில் தொடக்க வீரர் வியாஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. நான்காவதாகக் களமிறங்கிய புஜாரா மட்டும் நிலைத்து ஆடினார். 45-வது ஓவரின் கடைசிப் பந்தில் 127 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தபிறகே அவரை கர்நாடக அணியால் வீழ்த்த முடிந்தது. 

இறுதியில் செளராஷ்டிர அணி 46.3 ஓவர்களில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 41 ரன்கள் வித்தியாசத்தில் இறுதி ஆட்டத்தை வென்ற கர்நாடக அணி, விஜய் ஹஸாரே கோப்பையை வென்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது மயங்க் அகர்வாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.