எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புரோ கபடி: குஜராத்தை வீழ்த்தியது ஹரியாணா

5-ஆவது சீசன் புரோ கபடி போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணி 42-36 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஃபார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணியை தோற்கடித்தது.

News image

ரைடு செல்லும் ஹரியாணா வீரர்.

Updated On :2 செப்டம்பர் 2017, 7:13 pm

5-ஆவது சீசன் புரோ கபடி போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணி 42-36 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஃபார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணியை தோற்கடித்தது.
இதன்மூலம் 4-ஆவது வெற்றியை பெற்றுள்ளது ஹரியாணா. அதேநேரத்தில் தொடர்ச்சியாக அபாரமாக ஆடி வந்த குஜராத் அணி 2-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது. விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் 13-20 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்த ஹரியாணா, 2-ஆவது பாதி ஆட்டத்தில் அபாரமாக ஆடி குஜராத்தை வீழ்த்தியது.
கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், குஜராத்துக்கான முதல் புள்ளியை ரைடர் சச்சின் கைப்பற்ற, ஹரியாணா அணிக்கான முதல் புள்ளியை ரைடர் பிசாந்த் பெற்றுத் தந்தார். இதன்பிறகு ஆதிக்கம் செலுத்திய குஜராத் 6-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
7-ஆவது நிமிடத்தில் ரைடர் பிரசாந்த் மூலம் 2 புள்ளிகளை பெற்றது ஹரியாணா. 9-ஆவது நிமிடத்தில் "வாழ்வா-சாவா' ரைடு சென்ற குஜராத் கேப்டன் சுகேஷ், தனது ரைடின் மூலம் 2 புள்ளிகளை பெற்றுத் தந்தார். இதன்பிறகு 15-ஆவது நிமிடத்தில் ஆல்-அவுட் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டது ஹரியாணா.
அப்போது குஜராத் ரைடர் ரோஹித்தை பிடித்து, சூப்பர் டேக்கிள் மூலம் 2 புள்ளிகளை பெற்றது ஹரியாணா. இதன்பிறகு 17-ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒருமுறை ஆல் அவுட் ஆகும் நிலையில் இருந்து தப்பியது ஹரியாணா. இந்த முறை வாஸிர் சிங் ஹரியாணா அணியை காப்பாற்றினார். எனினும், 20-ஆவது நிமிடத்தில் ஹரியாணா ஆல் அவுட் ஆனது.
இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் குஜராத் அணி 20-13 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் முதல் நிமிடத்திலேயே குஜராத் ரைடர் சச்சின் "டெக்னிக்கல்' முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், சச்சின் தொடர்ந்து ரைடின் மூலம் புள்ளிகளைப் பெற, குஜராத் அணி 26-14 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
27-ஆவது நிமிடத்தில் ஹரியாணா ஆல் அவுட் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும், மோஹித் சில்லாரின் அபார ரைடால் 2 புள்ளிகள் கிடைக்க, அந்த அணி ஆல் அவுட் ஆவதிலிருந்து தப்பியது. இதன்பிறகு சூப்பர் டேக்கிள் மூலம் இரு புள்ளிகளை பெற்ற ஹரியாணா, மெதுவாக சரிவிலிருந்து மீண்டது.
அதேநேரத்தில், நெருக்கடிக்குள்ளான குஜராத் ஆல் அவுட் ஆனது.
இதுவே ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இதன்பிறகு பிரசாந்தின் அபார ரைடால் 34-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் (29-29) செய்தது ஹரியாணா. 36-ஆவது நிமிடத்தில் ஹரியாணா ரைடர் மகேந்திர ராஜ் புட்டின் அபார ஆட்டத்தால் 2-ஆவது முறையாக ஆல் அவுட் ஆனது குஜராத்.
இதனால் 35-29 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது ஹரியாணா. கடைசி நேரத்தில் குஜராத் போராடிய போதும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் ஹரியாணா 42-36 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஹரியாணா தரப்பில் 18 முறை ரைடு சென்ற பிரசாந்த் 14 புள்ளிகளை பெற்றுத்தந்தார். குஜராத் தரப்பில் 19 முறை ரைடு சென்ற சச்சின் 13 புள்ளிகளை கைப்பற்றினார்.
ஆட்டம் சமன்: இதனிடையே, பெங்கால் வாரியர்ஸ்-யு.பி.யோதா அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 26-26 என்ற புள்ளிகள் கணக்கில் சமன் ஆனது.

இன்றைய ஆட்டம்

குஜராத் ஃபார்ச்சூன்ஜயன்ட்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
நேரம்: இரவு 8 மணி
பெங்கால் வாரியர்ஸ்-தமிழ் தலைவாஸ், நேரம்: இரவு 9 மணி
இடம்: கொல்கத்தா, நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.