திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

200-ஆவது போட்டியில் களமிறங்கும் கோலி: டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:56 pm

Raghavendran

இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இது விராட் கோலி விளையாடும் 200-ஆவது ஒருநாள் போட்டியாகும். 

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசியின் புதிய விதிமுறைகளானது ஆட்டத்தை விறுவிறுப்பாக்கும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.  

நியூஸிலாந்துக்கு எதிராக மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மோதும் ஆட்டமே, ஐசிசி கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளின் கீழ் இந்தியா விளையாடும் முதல் ஆட்டமாகும்.

புதிய விதிமுறைகளின்படி, ரன் எடுக்க ஓடும் பேட்ஸ்மேன் கிரிûஸ தாண்டியபடி பேட்டை தரையில் படாமல் வைத்திருந்தாலும், அவர் கிரீஸுக்குள் வந்ததாகவே கருதப்படுவார்.

அதேபோல், எல்பிடபிள்யு விக்கெட்டில் நடுவர் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு (டிஆர்எஸ்) செய்யும்போது, நடுவர் தீர்ப்பே உறுதி செய்யப்பட்டாலும் சம்பந்தப்பட்ட அணியின் டிஆர்எஸ் வாய்ப்பு அப்படியே இருக்கும். 

வன்முறை உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் வீரர்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்றும் அதிகாரம் நடுவருக்கு உண்டு.
 

அணி வீரர்கள் விவரம்:

இந்தியா: 

ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா, விராட் கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, சாஹல்.

நியூஸிலாந்து:

மார்டின் கப்டில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஹென்ரி நிக்கோல்ஸ், காலின் டி கிராண்ட்ஹோமி, மிட்செல் சான்ட்னர், ஆடம் மிலின், டிம் சவுத்தி, ட்ரென்ட் போல்ட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.