டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ரெட் கார்பட்டில் ஜொலித்த விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா ஜோடி

மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா ஜோடி...

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:06 pm

Raghavendran

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது தோழியும் பாலிவுட் முன்னணி கதாநாயகியுமான அனுஷ்கா ஷர்மா ஆகியோர் மும்பியில் நடந்த விழா ஒன்றில் ஜோடியாகக் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

மும்பையில் இந்திய விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் விதமாக இண்டியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ் விழா நடைபெற்றது. 

இந்திய விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் விதமாக இந்த விழாவினை இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மற்றும் தொழிலதிபர் சந்ஜீவ் கோயங்கா-வின் ஆர்.பி.எஸ்.ஜி. ஆகியவை இணைந்து நடத்தின.

இதில், இந்தியாவின் முன்னணி விளையாட்டு வீரர்களான அஜிங்க்ய ரஹானே, உமேஷ் யாதவ், ஆர்.அஸ்வின், கேதர் ஜாதவ், சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், ப்ரணாய் குமார், புல்லேலா கோபிசந்த், சானியா மிர்சா மற்றும் மகேஷ் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதுமட்டுமல்லாமல் பாலிவுட் நட்சத்திரங்களான அமீர் கான், அக்ஷய் குமார், சித்தார்த் மல்ஹோத்ரா, மலாய்கா அரோரா கான், ஃபாரா கான் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்தியாவின் இளம் விளையாட்டு வீரர்களை கௌரவித்து அங்கீகாரம் அளிக்கும் விராட் கோலியின் இந்த முயற்சிக்கு நடிகர் அமீர் கான் பாராட்டு தெரிவித்தார். 

இவை அனைத்தையும் விட அங்கு விழாவை சிறப்பித்துக் கொண்டிருந்த விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா ஜோடிதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவர்கள் இருவரையும் அங்கிருந்த அனைத்து கேமராக்களும் மொய்த்துக்கொண்டிருந்தன. 

இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஒன்றை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஃப்ரோஃபைல் பிக்சராக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து விராட் கோலி விடுமுறை கேட்டிருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அப்போது விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா திருமணம் செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.