டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆஷஸ் தொடர் பயிற்சிப் போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி

ஆஷஸ் தொடர் பயிற்சிப் போட்டியில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியை இங்கிலாந்து அணி சனிக்கிழமை வீழ்த்தியது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:06 pm

Raghavendran

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி அங்கு ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதற்காக அங்கு சென்ற இங்கிலாந்து அணி முதலில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் பங்கேற்று விளையாடியது.

அடிலெய்டில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 293 ரன்கள் எடுத்தது. 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய லெவன் 233 ரன்கள் எடுத்தது. 60 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 207 ரன்களை எடுத்தது.

இந்நிலையில், 268 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸி. லெவன் அணி 75 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

இதனிடையே ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டனாக அந்த அணியின் மூத்த வீரரும், முன்னணி வேகப்பந்துவீச்சாளருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.