டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

முதல் டி20-யில் இந்தியா பேட்டிங்: கடைசி போட்டியில் நெஹ்ரா, முதல் போட்டியில் ஷ்ரேயாஸ்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. 

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:01 pm

Raghavendran

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெறுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் இந்தியாவின் மூத்த பந்துவீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ராவுக்கு இது கடைசி ஆட்டமாகும். இந்த ஆட்டத்தை அவருக்கான பிரியாவிடை ஆட்டமாக வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்தது.

எனவே இதில், ஆசிஷ் நெஹ்ராவுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி களமிறங்கியது.

அணி விவரம்:

இந்தியா: ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், புவனேஸ்வர் குமார், ஆசிஷ் நெஹ்ரா, ஜஸ்ப்ரீத் பும்ரா, சாஹல்.

நியூஸிலாந்து: மார்டின் கப்டில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), டாம் ப்ரூஸ், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஹென்ரி நிக்கோல்ஸ், காலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ட்ரென்ட் போல்ட், இஷ் சோதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.